சத்தீஸ்கர்: சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு தீவைத்து நக்சலைட்டுகள் அட்டூழியம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனங்களை நக்சலைட்டுகள் தீயிட்டு எரித்ததால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.
எரிக்கப்பட்ட வாகனங்கள்
எரிக்கப்பட்ட வாகனங்கள்
Published on

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சுரங்கங்கள் நிறைந்த பகுதியை சோன்பூர் என்ற இடத்துடன் இணைப்பதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள தனியார் நிறுவனம் சாலை அமைக்கும் வேலையை செய்ய கூடாது என இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

எனினும், இந்த மிரட்டலை பொருட்படுத்தாத அந்நிறுவனம் சாலைப் பணிகளை விரைவாக நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com