சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டப்பாகோண்டா பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த என்கவுண்டரில் பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து சிஆர்பிஎப் படையினர் பயன்படுத்தும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், 2010-ல் சிஆர்பிஎப் படையினரிடம் இருந்து அந்த துப்பாக்கியை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com