

செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி கவுரி. தயாளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தயாளன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வரும் வழியில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் தூங்கினார். அதிகாலை 3 மணிக்கு வாந்தி எடுத்து மயங்கினார்.
இதனை கண்ட அவரது மனைவி தயாளனை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தயாளனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து மோரணம் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.