சேத்துப்பட்டு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

சேத்துப்பட்டு அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் ஊத்தூர் மதுரா மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவருடைய மனைவி கனகவல்லி (22). திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. தினமும் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கனகவல்லி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி, தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி வலிதாங்கமுடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து கனகவல்லியை மீட்டு சேத்துப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தால். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் இதுகுறித்து செய்யார் உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com