சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டை அடுத்த தச்சூர் பகுதியில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் உள்பட போலீசார் மணல் கடத்தலை தடுக்க ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அஜீத் (வயது 20), ஜெகநாதன் (50) பரசுராமன் வயது (27) வினோத் (25) ஆகியோர் மினி லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் தச்சூர் செய்யாற்று படுகைகளில் இருந்து மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.

போலீசார் வருவதை கண்டதும் மினி லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டிச்சென்றதில் அஜீத் மற்றும் பரசுராமனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து மேலும் தப்பி ஓடிய ஜெகநாதன், வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com