சென்னை: மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் அண்ணா சாலையில் திடீர் பள்ளம்

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றுவரும் அண்ணா சாலையில் சுமார் 25 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. #Chennai #SuddenCrater #AnnaSalai
சென்னை: மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
Published on

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றுவரும் அண்ணா சாலையில் சுமார் 25 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்படுவதும், அதில் இருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறுவதும் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இந்நிலையில், மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றுவரும் அண்ணா சாலையில் நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல்  இடையே  இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் சுமார் 25 அடி நீளத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில் மேலாளர் அரவிந்த் ராய் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இந்த பள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு ஏப்ரல் 9-ம் தேதியும் இதே பகுதியில் பெரிய அளவிளான பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Chennai #SuddenCrater #AnnaSalai  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com