ஜூனியர் கிரிக்கெட் - சென்னை மாணவர் இரட்டை சதம்

பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் சென்னை மாணவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
இரட்டை சதம் அடித்த மாணவர் டி.சைலேஷ்
இரட்டை சதம் அடித்த மாணவர் டி.சைலேஷ்
Published on

பள்ளி அணிகள் இடையேயான ஜூனியர் கிரிக்கெட் போட்டி (12 வயதுக்குட்பட்டோர்) நந்தனம் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன.

இதன் ‘லீக்’ ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ்- செயின்ட் பேட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய செயின்ட் பீட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது.

அந்த அணி வீரர் டி.சைலேஷ் தேவ் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 93 பந்துகளில் 204 ரன் குவித்தார். இதில் 43 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் ஆடிய செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 26 ஓவர்களில் 111 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் பள்ளி 201 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com