தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பேருந்துகள் மீது கல் வீசிய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை:

கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும்,தமிழக அமைச்ச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

3 ஆண்டு சிறைதண்டனை மூலம், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழக்க நேரிடும். சிறை தண்டனைக்குப் பிறகும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிகிறது. #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com