தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டது

தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது.
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டது
Published on

சென்னை:

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. 

அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ஜா கட்டர் என்ற ராட்சத இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தீ விபத்துக்குள்ளான தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டது. இடிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர்  பீர் முகமது இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை  என்று அவர் கூறினார். இடிபாடுகளை அகற்றம் செய்யும் பணிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com