சென்னையில் மழை: செம்மொழி பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

சென்னையில் பெய்து வரும் மழையால் செம்மொழி பூங்காவின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 கார்கள் சேதம் அடைந்தன.
சென்னையில் மழை: செம்மொழி பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
Published on

சென்னை:

தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையில் ஓரளவு மழை விட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு சில பகுதிகளில் மட்டும் சாலைகளில் தண்ணீர் வடியாமல் இருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவின் வலது பக்க சுவர் மழையில் நனைந்து வெடிப்பு ஏற்பட்டிருந்தது. இன்று காலை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம்  அடைந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com