கார்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு

கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட கார்டூனை பயன்படுத்தியதாக கூறி பாலா உள்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கார்டூனிஸ்ட் பாலா மற்றும் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on

சென்னை:

நெல்லையில் நடந்த கந்துவட்டி மரணத்தை அடுத்து தமிழக அரசை விமர்சித்து கார்டூனிஸ்ட் பாலா வரைந்த காட்டூனானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார், பாலா மீது வழக்கு பதிவு செய்து அவரை சென்னையில் வைத்து கைது செய்தனர்.

மறுநாள் காலை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலா, ஜாமீனில் வெளிவந்தார். பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம் நடத்திய போது, சர்ச்சைக்குள்ளான கார்டூனை பயன்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக கார்டூனிஸ்ட் பாலா, பத்திரிக்கையாளர்கள் பாரதி தமிழன் மற்றும் அசத்துல்லா ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com