சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
Published on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மார்ச் மாதத்தில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் 15-வது நாட்களாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா உயர்த்ப்பட்டு 82.58 ரூபாய்ப்பு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 51 பைசா உயர்த்தப்பட்டு 75.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.04 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.58 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com