

சென்னை குடிநீர் வாரியம் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 12,000 நடைகள் வரை லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கி வருகின்றது. இதில் 2,500 நடைகள் ‘‘டையல் பார் வாட்டர்’’ முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டதால், குறிப்பிட்ட காலத்திற்குள் குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்வதற்காக வாரியம் குடிநீர் லாரிகளின் எண்ணிக்கையினை 850-ல் இருந்து 1150 வரை அதிகரித்த போதிலும், லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு நுகர்வோர் அதிக நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு, நுகர்வோரின் தேவைகேற்ப முன்பதிவு செய்யும்போதே குடிநீர் வழங்கப்படும் தேதி உறுதிசெய்வதற்கு தேவையான மாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ள சேவை முறையில் செய்யப்பட்டுள்ளது. இது வரும் திங்கட்கிழமை (29-ந்தேதி) முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தில், குடிநீர் தேவைக்காக முன்பதிவு செய்யும்போது குடிநீர் வழங்கப்படும் தேதி உறுதி செய்யப்படுகிறது. உதாரணமாக, 29-ந்தேதி அன்று முன்பதிவு செய்யும்போது, குடிநீர் பெற்றுக்கொள்ளும் தேதியை விருப்பத்தின்பேரில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு தேதியை (ஜூலை30-ந்தேதி அல்லது 31-ந்தேதி) தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் இயக்கப்படும் நடைகளின் எண்ணிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விநியோகிக்கும் வசதியைப் பொறுத்து முன்பதிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 9 ஆயிரம் லிட்டர், 12 ஆயிரம் லிட்டர் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லாரிகளும், அடுக்குமாடி அல்லாத குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 3 ஆயிரம் லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் மற்றும் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லாரிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைய தள வழி மூலமாக முன்பதிவு செய்ய இயலாதவர்கள், தொலைபேசி வாயிலாக அழைப்பு மையத்தை (0444567 4567) தொடர்பு கொண்டு 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை மட்டும் முன்பதிவு செய்து, தண்ணீர் வழங்கப்படும்போது கட்டணத்தை செலுத்தலாம்.
ஏணைய நுகர்வோர்கள் கட்டணத்தை செலுத்த இணையதள வங்கி, பற்று அட்டை, கடன் அட்டை இவற்றில் ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்துகொள்ளலாம்.
முன்பதிவில் உள்ள இருப்பு நிலையைப்பொறுத்து காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை கீழ்க்கண்ட நேரங்களில் மற்றும் கட்டண விவரங்களில் முன்பதிவுகள் செய்து கொள்ளலாம். இப்பதிவை ரத்து செய்யும் வசதி இல்லை. எனவே நுகர்வோர் தேவைக்கேற்ப மட்டுமே முன்பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருந்தது. சென்னை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்து லாரி தண்ணீர் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் முன்பதிவு செய்து குடிநீரை பெற்றதால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நடுத்தர மக்கள் முன்பதிவு செய்தாலும் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு குடிநீர் வாரியம் ‘டையல் பார் வாட்டர்’ திட்டத்தில் திருத்தம் செய்து ‘டையல் பார் வாட்டர் 2.0’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இனி லாரி தண்ணீருக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளதால் தேவையற்ற முன்பதிவுகள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாரிகளின் கொள்ளளவு, முன்பதிவு முறை, முன்பதிவு நேரம் மற்றும் கட்டண விவரங்களை கீழே பார்ப்போம்...