சொத்து-தொழில் வரியாக ரூ.523½ கோடி வசூல் - சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்

முந்தைய நிதி ஆண்டை (முதல் அரையாண்டு) ஒப்பிடுகையில், சொத்து வரியில் ரூ.57.25 கோடியும், தொழில் வரியில் ரூ.25.07 கோடியும் என மொத்தம் ரூ.82.32 கோடி கூடுதலாக வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து-தொழில் வரியாக ரூ.523½ கோடி வசூல் - சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2017-18-ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை மூலமாக சொத்துவரியாக ரூ.366.04 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.157.44 கோடி என மொத்தம் ரூ.523.48 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய நிதி ஆண்டை (முதல் அரையாண்டு) ஒப்பிடுகையில், சொத்து வரியில் ரூ.57.25 கோடியும், தொழில் வரியில் ரூ.25.07 கோடியும் என மொத்தம் ரூ.82.32 கோடி கூடுதலாக வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சொத்து மற்றும் தொழில் வரி தொடர்பான கேள்விகள், புகார்கள், பரிந்துரைகள் ஆகியவற்றை ‘1913’ என்ற கட்டணமில்லா எண்ணிலும், www.chennaicorporation.gov.in எனும் இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம். மேலும், சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாதோர் உடனே செலுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகளில் பங்காற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com