

சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
‘தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றும் ஆணையர் கூறினார்.