சென்னை ஆம்னி பஸ்சில் தலைமை ஆசிரியரிடம் ரூ. 1 லட்சம் கொள்ளை

சென்னை ஆம்னி பஸ்சில் தலைமை ஆசிரியரிடம் ரூ. 1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

போரூர்:

விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகர் முதல் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தர்மன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

இவர் சொந்த ஊரான அருப்புக்கோட்டை சென்று விட்டு நேற்று ஆம்னி பஸ் மூலம் சென்னை திரும்பினார். அப்போது பையில் ரூ. 1 லட்சம் ரொக்கம் வைத்து இருந்தார். பணத்துடன் இருந்த பையை இருக்கையின் மேல் உள்ள பகுதியில் வைத்திருந்தார்.

கோயம்பேட்டில் பஸ்சில் இருந்து இறங்கும் போது இருக்கையின் மேல் வைத்து இருந்த கைப்பையை காணாமல் தர்மன் அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த ரூ. 1 லட்சம் பணத்துடன் பையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பஸ் நிலைய போலீசில் தர்மன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெற்குன்றம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. சைக்கிள் மூலம் டீ வியாபாரம் செய்து வருகிறார். இன்று அதிகாலை அவர் கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் எடை மேடை அருகே டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மொபட்டில் வந்த 2 வாலிபர்கள் ராஜா விடம் டீ வாங்கி குடித்தனர். அப்போது அவர்கள் திடீரென ராஜாவின் பையில் வைத்திருந்த செல்போனை பறித்து தப்பிச்சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com