

சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனை படைத்தார்.
பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.