தியாகராயநகரில் பால்கனி இடிந்து மூதாட்டி பலி

சென்னை தியாகராயநகரில் பால்கனி இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இடிந்துள்ள பால்கனியை படத்தில் காணலாம்.
இடிந்துள்ள பால்கனியை படத்தில் காணலாம்.
Published on

சென்னை:

தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜாம்மாள் (65).

2-வது மாடியில் உள்ள சொந்த வீட்டில் இவர் 20 ஆண்டுகளாக குடியிருந்தார். இவருடைய கணவர் ராஜகோபால் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டின் பால்கனியில் சரோஜாம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் என்று அந்த பால்கனி இடிந்து விழுந்தது.

இதனால் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சரோஜாம்மாள் படுகாயம் அடைந்தார். அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 கால்களும் உடைந்தன.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளில் இருந்து சரோஜாம்மாளை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜாம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பால்கனி இடிந்து உயிர் இழந்த சரோஜாம்மாளுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் அங்கு வந்தனர். எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவம் அவர்களை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com