சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#Foreignmoney
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்து லிங்கேஸ்வரனை சோதனை செய்தபோது அவரின் கைப்பை, மற்றும் பேண்டில் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது.

அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com