

ஒடிசா மாநிலத்தில் நேற்று கரைகடந்த ‘பானி’ புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஒடிசாவில் கரைகடந்த பானி புயல் வங்காள தேசத்தை நோக்கி சென்றது. மேற்கு வங்காளம் மாநிலத்திலும் பானி புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனவே, மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசாரத்தை 48 மணி நேரம் ரத்து செய்துள்ளார். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா - சென்னை மார்க்கத்தில் 220-க்கும் அதிகமான ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.