செங்கத்தில் போலி டாக்டர் கைது

செங்கத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செங்கம்:

செங்கம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அருளானந்தம் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று ராஜவீதியில் சோதனை செய்தனர். அப்போது டாக்டருக்கு படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வந்த போலி டாக்டர் பாலமுருகன் என்பவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அருளானந்தம் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com