செங்கம் பகுதியில் குட்கா பதுக்கிய 2 பேர் கைது

செங்கம் பகுதியில் குட்கா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செங்கம்:

செங்கம் பகுதியில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஒருங்கிணைந்த குற்ற உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் சோதனை செய்யப்பட்டது. அதில் வாரச்சந்தை அருகே உள்ள தெருவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போதை பாக்குகள், புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாவேந்திரகுமார் (வயது 25) மற்றும் சீகாராம் (20) என்ற இருவரை செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com