சத்திரப்பட்டி அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை

சத்திரப்பட்டி அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சீகுபட்டியை சேர்ந்தவர் வீரையா. இவரது மகன் சூர்யா (வயது 20). பேண்டு வாத்தியக்கலைஞர்.

தற்போது ஊரடங்கு காரணமாக வேலை எதுவுமின்றி வீட்டிலிருந்து வந்தார். நேற்று முன்தினம் சூர்யா அவரது தாயார் வீரம்மாளிடம் மது குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுக்க மறுத்ததால், தாயிடம் தகராறு செய்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் சூர்யாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com