சேதராப்பட்டு அருகே கடைக்கு செல்ல மறுத்த சிறுவன் மீது தாக்குதல் - 3 பேருக்கு வலைவீச்சு

சேதராப்பட்டு அருகே கடைக்கு செல்ல மறுத்த சிறுவனை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

சேதராப்பட்டு:

சேதராப்பட்டு அருகே கரசூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்வர் கலிவரதன். இவரது மகன் ஸ்ரீவர்மன் (வயது 14). நேற்று மாலை ஸ்ரீவர்மன் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தான்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவதாசன், மணிவேல் என்ற குமார், ராஜன் ஆகியோர் ஸ்ரீவர்ம னிடம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறினர். ஆனால், ஸ்ரீவர்மன் பொருட்கள் வாங்கி வர மறுத்து விட்டான்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவதாசன் உள்பட 3 பேரும் சேர்ந்து அலுமினிய பாத்திரத்தல் ஸ்ரீவர்மனை தாக்கினர். இதில், ஸ்ரீவர்மன் காயம் அடைந்து மயங்கி விழுந்தான். இதையடுத்து அவன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டான்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை கலிவரதன் சேதராப் பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவதாசன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com