சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் தகவல்

சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் கூறினார்.
சந்திரயான்-2 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் தகவல்
Published on

தூத்துக்குடி விமான நிலையத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இதற்கான என்ஜின், மகேந்திரகிரியில் வைத்து பல்வேறு கட்டங்களாக 199 முறை சோதனை செய்யப்பட்டது.

இந்த செயற்கைகோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. 3 நாட்களில் செயல்பட தொடங்கும். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய இந்த ராக்கெட்டில் சுமார் 4 டன் வரை எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு எடுத்து செல்ல முடியும்.

தற்போது 4 டன் முதல் 6 டன் வரை எடை உள்ள செயற்கை கோள்களை சுமந்து செல்வதற்காக ‘செமி கிரையோஜெனிக்’ தொழில் நுட்பத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிவடையும்.

இதேபோன்று சந்திரயான்-2 விண்கலத்துக்கான சோதனைகள் மகேந்திரகிரி மையத்தில் நடந்து வருகிறது. தற்போது முதல்கட்ட சோதனை முடிவடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மார்க்-2 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com