

ஐதராபாத்:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை சிறுமி ஒருவர் 55 வயது ரிக்ஷா வண்டி தள்ளுபவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அதையும் மீறி குற்றம் புரிபவர்களுக்கு அதுவே கடைசி நாளாக அமையும்.
மேலும் கற்பழிப்பு வழக்குகளை காவல் நிலையத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தினால் மட்டும் போதாது. நிர்பயா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என கூறினார்.
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய அவர், ஒவ்வொரு திங்கட் கிழமையும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்' என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #andhragirlrape #ChandrababuNaidu