ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு: சரத் பவாரையும் சந்தித்தார்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மீண்டும் சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு: சரத் பவாரையும் சந்தித்தார்
Published on

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மாநிலக்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பற்கான யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுக்குப்பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று டெல்லியில் மீண்டும் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரியுடன் நடத்திய ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com