சுதந்திர தின விழாவுக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு

சண்டிகாரில் நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தின விழாவுக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு
Published on

சண்டிகார்:

சண்டிகாரைச் சேர்ந்த 12 வயது மாணவி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மாணவியிடம் வந்து ஏமாற்றி அருகில் இருந்த பூங்காவுக்கு கடத்திச் சென்றார்.

அங்கு உயரமான புதர்கள் மத்தியில் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பிறகு மாணவி வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி சொல்லி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளி பற்றி அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவி உடல் நிலை தேறி வருவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com