தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக் கூடும். தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு மலை தொடர்ச்சி மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதியில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லார், சோலையாறில் தலா 4 செ.மீ., வால்பாறை, சின்கோனா, நடுவட்டம் பகுதியில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com