சாம்பியன்ஸ் டிராபி: மலிங்காவின் மேஜிக் பந்து வீச்சை நம்பியிருக்கும் இலங்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கை அணி மலிங்காவின் மேஜிக் பந்து வீச்சை நம்பியிருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி: மலிங்காவின் மேஜிக் பந்து வீச்சை நம்பியிருக்கும் இலங்கை
Published on

ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றாலும், இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடரை இழந்திருந்தது.

இளம் வீரர்களை கொண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாதிக்க முடியாது என்று நினைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்கா மற்றும் காயத்தில் இருந்து மீண்ட மேத்யூஸ் ஆகியோரை இலங்கை அணியில் சேர்த்துள்ளது.

மலிங்கா கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது கிடையாது. தற்போது இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

அவர் டி20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இதனால் 10 ஓவர்கள் வீசக்கூடிய அளவிற்கு உடற்தகுதி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 10 ஓவர்கள் வீசி, தனது மேஜிக் பந்தின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘மலிங்காவின் உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 10 ஓவர்கள் பந்து வீசுவார் என்று நம்புகிறோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com