முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
Published on

புதுடெல்லி:

முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்த தொடங்கியது. 

விசாரணையின் போது, முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு பெண்களின் சமத்துவம் மற்றும் பாலின சமூக நீதிக்காக போராட விரும்புவதாக தெரிவித்தது.

விசாரணையின் போது. அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் கபில் சிபல் ஆஜரானார். கபில் சிபல் வாதாடுகையில், “முத்தலாக் விவகாரம் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம். மத்திய அரசு இதில் விதிமுறைகள் கொண்டு வருகிறது. ஆனால் என்னுடைய கருத்து சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது” என்றார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வருகின்ற 15-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடுவார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com