காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் மத்திய ஆயுதப் படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய ஆயுதப் படை போலீசார் 10 ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு படை வீரர்களின் ரோந்துப் பணி
பாதுகாப்பு படை வீரர்களின் ரோந்துப் பணி
Published on

ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை கண்காணித்து நிலைநாட்டுவது, பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதலாக மத்திய ஆயுதப் படை போலீசாரை உடனடியாக அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com