பாக். எல்லையில் விமான தளம் - கிடப்பில் இருந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையை ஒட்டி விமானப்படை தளம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
பாக். எல்லையில் விமான தளம் - கிடப்பில் இருந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
Published on

புதுடெல்லி:

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள மேற்கு எல்லையில் இருக்கும் குஜராத்தின் தீசா என்ற பகுதியில் விமானப்படை தளம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் அளித்திருந்த பரிந்துரை நீண்டகாலமான கிடப்பில் இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு கேபினட் கமிட்டி கூட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதை, நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த விமானப்படை தளம் அமைய இருப்பதாகவும், சுமார் ஆயிரம் மீட்டர் நீள ஓடுபாதை கட்டப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, வி.வி.ஐ.பி.கள் வருகை வசதி, நவீன கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த விமானப்படை தளம் மூலம் பாகிஸ்தான் எல்லையை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IAF #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com