

தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தாசன். இவரது மகள் ஷாலினி (வயது 19). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். வீட்டில் எப்போதும் செல்போன் பயன்படுத்தி மற்ற வேலைகள் செய்யாமல் இருந்ததால் அவரது தாய் கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி தனது வீட்டிலேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஷாலினியை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது தாய் ஜீவா கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.