பெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையில் பி.எஸ்.என்.எல். செல் சேவை டவர் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பி.எஸ்.என்.எல். செல்சேவை இயங்கவில்லை.
பெரும்பாறை பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடக்கம்
Published on

பெரும்பாறை:

பி.எஸ்.என்.எல். செல் சேவை டவரில் இருந்து 5 பாய்ண்டு சிக்னல் கிடைக்கிறது. ஆனால் யாருக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் இருந்தும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

எனவே இதுசம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பி.எஸ்.என்.எல். செல்சேவையை சரிசெய்து இயக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com