புதுவை மத்திய சிறையில் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

புதுவை மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது செல்போன்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின.
புதுவை மத்திய சிறையில் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளியில் இருந்து பொருட்கள் கொண்டு வந்து வழங்கப்படுவதாகவும், போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார் வருகிறது.

இந்நிலையில், மத்திய சிறைச்சாலையில் இன்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டில் சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 10 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com