ராஜாஅண்ணாமலைபுரத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது

ராஜாஅண்ணாமலைபுரத்தில் செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ராஜேஸ், ஓட்டல் ஊழியரான இவரது அறையில் இன்று காலை செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

செல்போனை திருடிய வாலிபரின் பெயர் ரமேஷ். நேபாளத்தை சேர்ந்த இவர் மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். 6 மாதத்துக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீண்டும் சென்னை வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அவரிடம் அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com