ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டிக்வார் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறுகையில், பூஞ்ச் மாவட்டம் டிக்வார் செக்டாரில் உள்ள நாகர்கோட் பகுதியில் படைவீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால், சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று சிறுவர்கள் பலியாகினர். இதேபோல் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com