மோடியின் அடுத்த திட்டம் எக்ஸாம் வாரியர்ஸ் 2 - ராகுல் காந்தி

சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக்கானதால் மன அழுத்தம் அடைந்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் 2 என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். #CBSEpaperleak #RahulGandhi #PMModi #ExamWarriors2
மோடியின் அடுத்த திட்டம் எக்ஸாம் வாரியர்ஸ் 2 - ராகுல் காந்தி
Published on

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பொதுத்தேர்வுகளில் 12-ம் வகுப்புக்கான பொருளாதாரம் மற்றும் 10-ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கிடையே, 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ நேற்று அறிவித்தது. இதனால் பெற்றோர், மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் மனஉளைச்சல் அடைய கூடாது என்பதற்காக எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அடுத்ததாக தற்போது சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கானதால் மனஉளைச்சலில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் 2 என்ற புத்தகத்தை மோடி வெளியிடுவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com