மேற்கு வங்காளம்: கூர்கா இயக்க தலைவரை கைது செய்ய சி.பி.ஐ. கோரிக்கை

மேற்கு வங்காளத்தில் கொலை வழக்கு தொடர்பாக கூர்கா இயக்க தலைவர் பிமல் குருங்கை கைது செய்ய நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்கு வங்காளம்: கூர்கா இயக்க தலைவரை கைது செய்ய சி.பி.ஐ. கோரிக்கை
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தை சேர்ந்த அகில பாரதிய கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி டார்ஜிலிங்கில் சவுக் பஜாரில் வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரில் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் மீது குற்றம் சாட்டி இருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 54 பேர் மீது இதில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணை உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கொலை தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 54 பேரில் 22 பேர் ஆஜராகவில்லை. கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங்கும் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவர் உள்பட 22 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com