தபால் துறை தேர்வு: அரியானா மாணவர்கள் தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்தது எப்படி? - சி.பி.ஐ. சோதனை

அரியானாவை சேர்ந்த மாணவர்கள் தபால் துறை தேர்வின்போது தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது.
தபால் துறை தேர்வு: அரியானா மாணவர்கள் தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்தது எப்படி? - சி.பி.ஐ. சோதனை
Published on

சண்டிகார்:

சமீபத்தில் மத்திய அரசின் தபால் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு போன்ற ஊழியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடந்தது.

இதில் தமிழ்மொழி தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முதலிடம் பிடித்ததாக முடிவு வெளியிடப்பட்டது. தமிழே தெரியாத அரியானா மாநிலத்தவர் எப்படி தமிழில் தேர்ச்சி பெற்றார் என்ற கேள்வி எழுந்தது.

தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், தமிழே தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் எப்படி பணியாற்ற முடியும் என்றும் மத்திய அரசுக்கு புகார்கள் வந்தது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். அரியானாவில் தமிழில் தேர்வு எழுதியது தொடர்பாக அங்குள்ள தபால் துறை அதிகாரிகளின் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. எந்த அடிப்படையில் தமிழ் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது, முதலிடம் பெற்றது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com