

புதுடெல்லி:
நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஊழல் மிகுந்துள்ளதாக சி.பி.ஐ.க்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி, ஷில்லாங், ஸ்ரீநகர், சென்னை, மதுரை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இதில் அடக்கம்.