ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ- அமலாக்கத்துறை தீவிரம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரம் காட்டுகிறது.
சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம்
Published on

புதுடெல்லி:

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் மனு செய்து இருந்தனர். நேற்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கினார்.

இந்த நிலையில் ஏர்செல் வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சி.பி.ஐ. வக்கீலும், அமலாக்கத்துறை வக்கீலும் புதிய மனுதாக்கல் செய்தனர். அதில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஷைனி தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் முழு விசாரணை முடித்த பிறகு கோர்ட்டை அணுகலாம் என்று ஷைனி உத்தரவிட்டார். இதனால் ஏர்செல் வழக்கில் இப்போதைக்கு ப.சிதம்பரத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மனு தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com