காவிரிக்காக களமிறங்கிய டிராபிக் ராமசாமி - சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். #CauveryMangementBoard #TrafficRamaswamy
காவிரிக்காக களமிறங்கிய டிராபிக் ராமசாமி - சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

அவ்வகையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், சமூக அமைப்பினர் மற்றும் மாணவர்களும் காவிரி போராட்டத்தில் களமிறங்கி உள்ளனர்.  #CauveryMangementBoard #TrafficRamaswamy

X

Maalai Malar
www.maalaimalar.com