காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க விளக்க கூட்டம்

காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி தோகைமலை பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க விளக்க கூட்டம்
குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க விளக்க கூட்டம்
Published on

தோகைமலை:

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 பஞ்சாயத்துகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு தோகைமலை பகுதியில் 253 குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக அரசுக்கு ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து கட்சியினர் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்தநிலையில், காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி தோகைமலை பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். இந்த விளக்க கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com