தொழிலதிபரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது

திருச்சி உறையூரில் கடையில் இருந்த தொழிலதிபரிடம் மர்ம நபர் ஒருவர் அவரின் சட்ட பையில் இருந்த ரூ. 23 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
தொழிலதிபரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது
Published on

திருச்சி:

திருச்சி உறையூர் விவேகானந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அசோக்குமார் (45), உறையூர் பாண்டமங்கலத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையில் இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரின் சட்டை பையில் இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.  

இது குறித்து அவர் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com