நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கு: தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கு: தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ்
Published on

மதுரை:

குமரி மாவட்டம், மகா சபாவை சேர்ந்தவர் ஜெயக்குமார் தாமஸ். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில், ஏழை, கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் தமிழகத்தில் போதிய வசதிகளுடன் பள்ளிகள் உள்ளன. எனவே நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு எனக்கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பதில் மனு தாக்க செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com