கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு சித்ரவதை - போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு

மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக போலீஸ்காரர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு
வழக்கு
Published on

மதுரை:

மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தாரப்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் நிஷா (வயது 23). இவருக்கும் மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ள குமார் (30) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 22 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக தரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குமார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சமயநல்லூர் போலீசில் நிஷா புகார் செய்தார்.

மேலும் குமாரின் தந்தை ரவி, சகோதரர் பொன்னாங்கம் (32), அவரது மனைவி மகேஸ்வரி (26) மற்றும் உறவினர் மணிகண்டனின் மகன்கள் ராஜேஷ் (30), காமேஷ் (33) ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com