மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 400 நிறுவனங்கள் மீது வழக்கு

உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதியன்று சென்னை முழுவதும் விடுமுறை அளிக்காத 400 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 400 நிறுவனங்கள் மீது வழக்கு
Published on

சென்னை:

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டால், அவர்களுடைய ஒப்புதலுடன் உரிய படிவம் 24 மணி நேரத்துக்கு முன்பு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் உழைப்பாளர் தினத்தன்று முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து அமைச்சர் நிலோபர் கபில் ஆணைக்கிணங்க சென்னை தொழிலாளர் கமி‌ஷனர் நந்தகோபால், கூடுதல் கமி‌ஷனர் யாஸ்மின் பேகம், இணை கமி‌ஷனர் கோவிந்தன் ஆகியோர் உத்தரவிற்கு இணங்க தொழிலாளர்கள் உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் சென்னை முழுவதும் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் வாகன நிறுவனங்கள் என 495 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடாக செயல்பட்ட 400 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com