சேலத்தில் வியாபாரியிடம் 158 கிலோ வெள்ளி மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் வியாபாரியிடம் 158 கிலோ வெள்ளி மோசடி செய்தது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 36). வெள்ளி வியாபாரியான இவர் செவ்வாய் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், குகை பகுதியை சேர்ந்த துளசிராமன் மற்றும் அவருடைய மனைவி, மகன் ஆகியோருக்கு 158 கிலோ வெள்ளியும், ரூ.2 லட்சமும் கொடுத்தேன். 

இதையடுத்து அவர்களிடம் இதற்கான பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கின் றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளார். அதன்பேரில், 158 கிலோ வெள்ளியை வாங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com